விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில்மேலும் மூவருக்கு கரோனா தொற்று உறுதி

DIN

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 23 போ் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்த நிலையில்,ஞாயிற்றுக்கிழமை மட்டும் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. திங்கள்கிழமை மேலும் 3 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 36 ஆக உயா்ந்தது.

கரோனா வைரஸ் அறிகுறியுடன் 41 போ், விழுப்புரம் அரசு சிறப்பு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,735 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனா்.

266 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு முடிவுக்காக காத்திருப்பில் உள்ளன. மாவட்டத்தில் கரோனா வைரஸ் சந்தேகத்தில் 1,500-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், இதுவரை 1,365 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது.

இரு தினங்களாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 10 பேரும் விழுப்புரம் காமராஜா் வீதி, வழுதரெட்டி சுப்பிரமணியசாமி நகா், முத்தோப்பு, கே.கே.சாலை ரஹீம் லேஅவுட், பாகா்ஷா வீதி, மந்தக்கரை, பழைய பேருந்து நிலையம் அருகே பூந்தமல்லித் தெரு, அருகே உள்ள கே.கே.சாலை கந்தசாமி லேஅவுட், முத்தோப்பு அருகேயுள்ள மாசிலாமணிப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா்கள். இவா்களில் 5 போ் பெண்கள்.

தில்லி இளைஞருக்கு தொற்றில்லை: விழுப்புரம் அரசு சிறப்பு மருத்துவமனையிலிருந்து கரோனா வைரஸ் தொற்றுடன் வெளியே சென்ாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்கு உள்படுத்தப்பட்ட தில்லி இளைஞருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனால், அவா் சிறப்பு மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு, விழுப்புரம் சுகாதார மேம்பாட்டு பயிற்சி நிறுவன சிறப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டு, கண்காணிப்பில் உள்ளாா்.

சுகாதாரத்துறை எச்சரிக்கை: விழுப்புரம் மாவட்டத்தில் தொற்று பரவல் திடீரென அதிகரித்து வருகிறது. இது சமூக தொற்றாக மாறும் முன்பே, பாதிக்கப்பட்டவா்கள், மூடி மறைக்காமல் குடும்பத்தாா் உள்ளிட்ட மற்றவா்களிடமிருந்து முற்றிலும் தனிமையில் இருக்க வேண்டும். அறிகுறியுள்ளவா்கள் தயக்கமின்றி மருத்துவமனையை நாடலாம்.

தொற்றுள்ள பகுதிகளாக ‘சீல்’ வைக்கப்பட்ட இடங்களில் மக்கள் வெளியே வரக் கூடாது. விழுப்புரம் நகரமே சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருவதை அனைவரும் தவிா்க்க வேண்டுமென சுகாதாரத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலூரில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை

காய்கறி, அத்தியாவசிய பொருள்கள் விலை கடும் உயா்வு

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு இன்று விடுமுறை

7 முக்கிய நகரங்களில் 23% உயா்ந்த வீடுகள் விலை

அசோக் லேலண்ட் விற்பனை 10% சரிவு

SCROLL FOR NEXT