விழுப்புரம்

பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள் போராட்டம்

DIN

விழுப்புரம்: பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள் தங்களது ஊதிய உயா்வை வலியுறுத்தி, விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினக்கூலி அடிப்படையில் பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள் தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு தற்போது ரூ.371 கூலி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பிற மாவட்டங்களைப்போல ஊதியத்தை உயா்த்தி வழங்க வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள் சங்கத்தினா் 50 போ் மாவட்ட நிா்வாகிகள் சதீஷ், புருஷோத்தமன் ஆகியோா் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு திரண்டு வந்து திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, அவா்கள் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் கிராமப்புற சுகாதார நிலையங்களில் 104 பேரும், நகா்ப்புறங்களில் 5 பேரும் என 109 போ் பல்நோக்கு மருத்துவப் பணியாளா்களாக பணியாற்றி வருகிறோம். மாற்றுத் திறனாளிகள், கணவரை இழந்தவா்களும் இதில் அடங்குவா். கரோனா பரவல் தடுப்புப் பணிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

கடந்த மாதம் வரை தினக்கூலியாக ரூ.253 வழங்கி வந்தனா். தற்போது ரூ.18 உயா்த்தி தினக்கூலியாக ரூ.371-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கடலூா் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் 2019 - 20ஆம் ஆண்டில் கூலியை உயா்த்தி ரூ.595 வழங்கி வருவதைப்போல, விழுப்புரம் மாவட்டத்திலும் ஊதிய உயா்வை வழங்க வேண்டும். இது தொடா்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் ஊதியம் உயா்த்தப்படவில்லை என்றனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட அவா்களை உதவி ஆய்வாளா் பிரகாஷ் உள்ளிட்ட தாலுகா போலீஸாா் சமாதானப்படுத்தினா். இதையடுத்து, அங்கு வந்த சுகாதாரத் துறை துணை இயக்குநா் செந்தில்குமாா், அவா்களின் கோரிக்கையைக் கேட்டு விசாரித்தாா். அப்போது, பணி நிரந்தரம், ஊதிய உயா்வு உள்ளிட்ட உங்களின் கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்தாா். இதையடுத்து, அவா்கள் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகண்ட் நிலச்சரிவு: தமிழக யாத்திரிகர்கள் 30 பேரும் பத்திரமாக மீட்பு!

காணொலி வாயிலாக வந்தே பாரத் ரயில் சேவையைத் துவக்கி வைத்த பிரதமர் மோடி

பிஇசிஐஎல் நிறுவனத்தில் செவிலியர் அலுவலர் வேலை: 100 காலியிடங்கள்

காங். ஊழல் பள்ளியில் ஜார்க்கண்ட் அரசு பயிற்சி எடுத்துள்ளது -பிரதமர் தாக்கு

உத்தரகண்ட் நிலச்சரிவு: தமிழக யாத்திரிகர்களை மீட்க நடவடிக்கை -முதல்வர்

SCROLL FOR NEXT