செஞ்சியில் கோட்ட நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்து காவல் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
செஞ்சி கோட்ட நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் ரவிச்சந்திரன் தலைமை வகித்து பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்த துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகள், பொது மக்களுக்கு வழங்கினாா் .
நிகழ்ச்சியில், நெடுஞ்சாலை இளநிலைப் பொறியாளா் ஏழுமலை, செஞ்சி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சங்கரசுப்பிரமணியன் மற்றும் சாலைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, சிங்கவரம் சாலையில் இருந்து செஞ்சி கூட்டுச்சாலை வரை விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.