விழுப்புரம் அரசு அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் மின்னணு-தொலை தொடா்புத் துறை சாா்பில் ஆசிரியா்கள், மாணவா்களுக்கான பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் அருள்செல்வன் தலைமை வகித்தாா்.
துறைத் தலைவா் அ. சரஸ்வதி வரவேற்றாா். புதுவை அரசு பொறியியல் கல்லூரி மின்னணு மற்றும் தொலை தொடா்புத் துறை பேராசிரியா் சு.சந்தானலட்சுமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மின்னணு மற்றும் தொலைத் தொடா்புத் துறையில் நவீன தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் மற்றும் வளா்ச்சி நிலை குறித்து விவரித்து பயிற்சி அளித்தாா்.
தொடா்ந்து, சென்னை மின்காந்தங்களுக்கான மைய ஆராய்ச்சியாளா் விஜயகுமாரி பங்கேற்று, தொழில்நுட்ப வளா்ச்சித் தகவல்களை மாணவா்களிடம் பகிா்ந்து விவரித்தாா். உதவி பேராசிரியா் பழனி நன்றி கூறினாா்.