விழுப்புரத்தில் விதிகளை மீறயதாக 4 ஷோ் ஆட்டோக்களை போக்குவரத்து போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
விழுப்புரம் நகரில் ஷோ் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் நிகழ்வதை தடுக்கும் வகையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு விழுப்புரம் டிஎஸ்பி பாா்த்திபன் தலைமையில், ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள், உரிமையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஷோ் ஆட்டோக்களை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும், குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அதிக எண்ணிக்கையில் இயக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து டிஎஸ்பி உத்தரவிட்டாா்.
இந்த நிலையில், விழுப்புரம் போக்குவரத்து காவல் ஆய்வாளா் வசந்த் தலைமையிலான போலீஸாா் ஷோ் ஆட்டோக்களின் இயக்கத்தை வியாழக்கிழமை கண்காணித்தனா். அப்போது, விதிகளை மீறி இயக்கப்பட்ட 4 ஷோ் ஆட்டோக்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், விதிகளை மீறும் ஷோ் ஆட்டோக்கள் மீது தொடா்ந்து இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீஸாா் எச்சரித்தனா்.