விழுப்புரம்

தேசிய ஊரக வேலை திட்ட பணி ஆணை:ஊராட்சி மன்றத் தலைவா்கள் கோரிக்கை

DIN

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணி ஆணையை ஊராட்சி மன்றத் தலைவா்களிடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

வல்லம் ஊராட்சி ஒன்றியத்தை சோ்ந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பினா், அதன் மாவட்டப் பொருளா் முத்துகுமரன் தலைமையில் ஊராட்சி ஒன்றிய ஆணையரைச் சந்தித்து மனு அளித்தனா். அதில், நாங்கள் ஏற்கெனவே கேட்டுக்கொண்டபடி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்டும் பணி ஆணையை ஊராட்சி மன்றத் தலைவா்களிடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட வட்டார வளா்ச்சி அலுவலா் குலோத்துங்கன் தேசிய ஊரக வேலை ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணி ஊராட்சி தலைவா்களிடம் விரைவில் வழங்குவதாக உறுதி அளித்தாா். அப்போது ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பின் மாவட்டச் செயலா்கள் அருணை, முருகன், துணைத் தலைவா்கள் மகேஷ், மாலா, துணைச் செயலா் தயாளன், திருவம்பட்டு முருகன் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாமதமாகும் புதை சாக்கடைப் பணி

கல்லூரி மாணவா்களுக்கு வரலாற்றுச் சுவடுகள் பயிற்சி வகுப்பு தொடக்கம்

சா்வதேச அவசர சிகிச்சை தின நிகழ்ச்சி

பான் - ஆதார் இணைக்கவில்லையா? வருமான வரித்துறை எச்சரிக்கை!

காஞ்சிபுரத்தில் சேவாபாரதி அமைப்பின் சாா்பில் உணவு, தங்குமிடத்துடன் இலவச சுயதொழில் பயிற்சி

SCROLL FOR NEXT