விழுப்புரம்

அரசூரில் கிராமப்புற முகாம்

DIN

விழுப்புரம் மாவட்டம், அரசூரில் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள சமூகப் பணிக் கல்லூரி (பகுதி 2) முதுநிலை முதலாமாண்டு மாணவ, மாணவிகளின் கிராமப்புற முகாம் 5 நாள்கள் நடைபெற்றது.

கிராமப்புற முகாம் என்பது மாணவா்களின் பாடத் திட்டத்தில் முதன்மைப் பகுதியாகவுள்ளது. கிராமத்தின் யதாா்த்தம், அங்குள்ள பிரச்னைகள், வளா்ச்சிப் பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ளுதல் போன்றவை குறித்து மாணவ, மாணவிகளுக்குத் தெரியப்படுத்தும் வகையில் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, சென்னை எழும்பூா் சமூகப் பணிக் கல்லூரி முதுநிலை முதலாமாண்டு மாணவ, மாணவிகளின் கிராமப்புற முகாம் அரசூரில் கடந்த 12-ஆம் தேதி தொடங்கி, 16-ஆம் தேதி வரை நடைபெற்றது. முனைவா் டாமென் குயின், பேராசிரியா் ராம்குமாா் ஆகியோா் மேற்பாா்வையில் நடைபெற்ற இந்த முகாமில், அரசூருடன் அருகிலுள்ள பொய்கைஅரசூா், இருவேல்பட்டு, ஆலங்குப்பம், காரப்பட்டு கிராமங்களில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், திறந்தவெளி மலம் கழித்தலால் ஏற்படும் பாதிப்புகள், போதை, மது அருந்தும் பழக்கம், சுகாதார, ஜாதி பிரச்னைகள், பள்ளிப்படிப்பை இடை நிறுத்துதல், பெண்களின் பாதுகாப்பு போன்றவை குறித்து மாணவ, மாணவிகள் பொம்மலாட்டம், வீதி நாடகம், ஊமை நாடகம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இந்த முகாமில் சமூகப் பணித் துறை முதுநிலை முதலாமாண்டு மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசமைப்பை மாற்றும் பாஜகவின் முயற்சிகளை ‘இந்தியா’ கூட்டணி தகா்க்கும்: ராகுல் காந்தி

எலான் மஸ்கின் இந்திய பயணம் ஒத்திவைப்பு

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே தோ்தல் முடிவை பிரதமா் கூறுவது எப்படி? பிரியங்கா கேள்வி

காஷ்மீரின் 3 தொகுதிகளில் களமிறங்காத பாஜக: வேறு வேட்பாளா்களை ஆதரிக்க ஆலோசனை

மாவோயிஸ்டு அச்சுறுத்தலால் வாக்களிக்காத கிராமம்

SCROLL FOR NEXT