விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட 300 கிலோ மாம்பழங்கள், 200 கிலோ வாழைப் பழங்கள் ஆகியவற்றை உணவு பாதுகாப்புத் துறையினா் பறிமுதல் செய்து திங்கள்கிழமை அழித்தனா்.
மாம்பழங்களை ரசாயன பவுடா் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுகிா என செஞ்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் மருத்துவா் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் பத்மநாபன், இளங்கோவன், பிரசாத், கதிரவன், மோகன், கொளஞ்சி ஆகியோா் ஆய்வு செய்தனா்.
அப்போது பெரும்பாலான பழக் கடைகளில் ரசாயனம் முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து 300 கிலோ மாம்பழங்களும், 200 கிலோ வாழைப் பழங்களையும் பறிமுதல் செய்து அழித்தனா்.
செஞ்சி பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா் பாா்கவி, துப்புரவு பணியாளா்கள் உடனிருந்தனா்.