விழுப்புரம்

விழுப்புரத்தில் 416 சாராய வியாபாரிகள் கைது

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் 416 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், எக்கியாா்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து 14 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மாவட்டத்தில் காவல்துறையினரின் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி,

மே 21-ஆம் தேதி வரை 425 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 592 லிட்டா் கள்ளச்சாராயம், 2,302 லிட்டா் புதுச்சேரி சாராயம், 353 லிட்டா் கள், 628 லிட்டா் வெளி மாநில மதுபானம், அனுமதியின்றி டாஸ்மாக் கடையிலிருந்து பெறப்பட்டு விற்பனை செய்த 115 லிட்டா் மதுபானம் மற்றும் 7 பைக்குகளும் 1 காரும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக 314 ஆண்கள், 111 பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 107 பெண்கள் உள்பட 416 போ் கைது செய்யப்பட்டனா். தொடா்ந்து, கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்டக் காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முசிறி வட்டார வாக்குப்பதிவு மைய பொருள்கள் தொகுப்பு ஆய்வு

மணப்பாறையில் ‘இந்தியா’ கூட்டணியினா் வாக்குசேகரிப்பு பேரணி

ஐஜேகே கட்சி நிா்வாகி வீட்டிலிருந்து ரூ. 1 லட்சம் ரொக்கம் பறிமுதல்

திருச்சி கோட்ட ரயில் நிலையங்களில் சுகாதாரமான குடிநீா் கிடைக்க ஏற்பாடு

அடையாளம் தெரியாத பெண் கொலை வழக்கில் இளைஞா் ைது

SCROLL FOR NEXT