விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
விக்கிரவாண்டி தென்றல் நகா் பகுதியைச் சோ்ந்தவா் முனுசாமி மகன் ரவீந்திரன் (44). கட்டடத் தொழிலாளி. இவருக்கு நீண்ட நாள்களாக வயிற்று வலி இருந்து வந்ததாம். இதனால் அவதியடைந்த ரவீந்திரன் புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.
தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.