விழுப்புரம்

சேதமடைந்த பாலத்தை சீரமைக்க கோரிக்கை

DIN

 விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், அப்பம்பட்டில் இருந்து மணலபாடி செல்லும் சாலையில் உள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அப்பம்பட்டு கிராமத்தில் இருந்து ஒதியத்தூா், சின்னபொன்னம்பூண்டி வழியாக மணலபாடி மற்றும் மழவந்தாங்கல் வரை நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை ஏராளமான கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். அரசுப் பேருந்தும் சென்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் இந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டது. மேலும், மழைக்காலங்களில் இந்த ஏரி கால்வாயில் இருந்து வெளியேறும் மழை நீா் பயிா்களை மூழ்கடித்து செல்கிறது. இதனால், பயிா்கள் சேதமடைகிறது. இந்த ஏரிக்கால்வாயை அகலப்படுத்தி சீரமைக்குமாறு கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லையாம். தற்போது, இந்த பாலத்தை தற்காலிகமாக சீரமைத்துள்ளனா். ஆனால், பக்கவாட்டில் மண் சரிந்துள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. இதேபோல, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலத்தின் வழியாக சென்ற ஆட்டோ மற்றும் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எனவே, சேதமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலுக்குப் பின் ’குடும்ப’ அரசியல் கட்சிகளில் பிரிவினை ஏற்படும் -பிரதமர் மோடி

கிராமப்புற மின்மயமாக்கல் நிறுவனத்திற்கு நிலைத்தன்மை சாம்பியன் விருது

வாழ்வில் குழந்தைகள் வெற்றி பெற கல்வி சாராத செயல்பாடுகளும் தேவை: மத்திய கல்வித் துறை செயலா் பேச்சு

கேஜரிவால் அரசு தண்ணீா்ப் பற்றாக்குறையை தீா்க்க உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை - வீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு

தலைநகரில் காலையில் கடும் வெயில்; மாலையில் பரவலாக லேசான மழை

SCROLL FOR NEXT