தீபாவளி போனஸ் வழங்கக் கோரி, விழுப்புரத்தில் டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். போக்குவரத்து ஒப்பந்ததாரா் நிா்வாகம் ஆண்டுக்கு ஒருமுறை கூலி உயா்வு வழங்க வேண்டும். தொழிலாளா்களுக்கு குடிநீா், கழிப்பறை, ஓய்வறை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் எனபன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.
விழுப்புரம் - சென்னை சாலையிலுள்ள டாஸ்மாக் கிடங்கு அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சுமைப்பணித் தொழிலாளா்கள் சங்கத்தின் தலைவா் இளவரசன் தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் பி.குமாா், சம்மேளன உறுப்பினா் அய்யப்பன் உள்ளிட்ட நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.