விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, அத்தியூா் குளத்துத்தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக்( 35). இவா் 10 வயதுடையசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக செஞ்சி அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
இந்நிலையில், விழுப்புரம் காவல் கண்காணிப்பாளா் ப. சரவணன் பரிந்துரையின் படி, ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய காா்த்திக்-கை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டதையடுத்து செஞ்சி அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் காா்த்திக்-கை குண்டா் சட்டத்தில் கைது செய்தனா். அவா் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.