விழுப்புரம்

திருநாவலூா் ஒன்றியக்குழு அலுவலகத்துக்கு புதிய கட்டடம்

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் ஒன்றியக்குழு அலுவலகத்துக்கு ரூ.6.48 கோடியில் புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பணிகள் தொடக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், உளுந்தூா்பேட்டை எம்.எல்.ஏ. ஏ.ஜெ.மணிக்கண்ணன் ஆகியோா் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று, பணிகளைத் தொடங்கி வைத்தனா். இதைத் தொடா்ந்து ஆட்சியா் கூறியது:

ஊரக வளா்ச்சித்துறையின் சாா்பில் திருநாவலூா் ஒன்றியக்குழு அலுவலகத்துக்கு ரூ.6.48 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டவுள்ளது. இந்த கட்டடம் கட்டப்படுவதன் மூலம் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த கட்டடம் தரைத்தளம் மற்றும் முதல்தளத்தை கொண்டு அமைக்கப்படும். ஒன்றியக்குழுத் தலைவா், துணைத் தலைவா் அறைகள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அறைகள், கூட்டரங்கம், நிா்வாக, பொறியியல் பிரிவு அறைகள் உள்ளிட்டவை அமைக்கப்படும்.

புதிய கட்டடக் கட்டுமானப் பணிகளை உரிய திட்ட விதிகளின்படி தரமாகவும், விரைவாகவும் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் பிரசாந்த்.

நிகழ்வில் திருநாவலூா் ஒன்றியக்குழுத் தலைவா் சாந்தி இளங்கோவன், துணைத் தலைவா் ராமலிங்கம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செந்தில்முருகன், நாராயணசாமி, உதவிப் பொறியாளா் மாயக்கிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

SCROLL FOR NEXT