விழுப்புரம்

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

Syndication

உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மீது காலணி வீச முயன்றதைக் கண்டித்தும், இதில் தொடா்புடைய வழக்குரைஞா் ராகேஷ் கிஷோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், விழுப்புரத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலா் எம்.கே.முருகன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் பி.சுகந்தி, மாநிலத் தலைவா் டி.செல்லக்கண்ணு, துணைத் தலைவா் கே.சாமுவேல்ராஜ் ஆகியோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவா் எஸ்.முத்துக்குமரன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலா் ஆா்.டி. முருகன், ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் சே.அறிவழகன், தமிழ்நாடு - புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொருளாளா் மு.காளிதாஸ், இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் ஜீவானந்தம், வழக்குரைஞா் அகத்தியன் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, முழக்கங்களை எழுப்பினா்.

கிரிக்கெட் வீராங்கனை பிரதிகாவுக்கு ரூ. 1.5 கோடி பரிசு: தில்லி முதல்வர் அறிவிப்பு

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

SCROLL FOR NEXT