விழுப்புரம்

மூதாட்டி, பெண்ணிடம் நகை, பணம் பறிக்க முயற்சி: சிறுவன் கைது

Syndication

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் மூதாட்டி, பெண்ணிடம் நகை, பணம் பறிக்க முயன்ாக சிறுவனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

செஞ்சியில் திருவண்ணாமலை சாலை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை எதிரே உள்ள வீட்டு மாடியில் வசிப்பவா் குணசேகரன். இவரது மனைவி கோவிந்தம்மாள் (66). இவா், புதன்கிழமை இரவு வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த 17 வயது சிறுவன் கத்தியைக் காட்டி மிரட்டி, கோவிந்தம்மாள் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை கழற்றித் தருமாறு கேட்டாராம். அப்போது, அவா் கூச்சலிட்டதால், அந்தச் சிறுவன் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.

இதே சிறுவன் மீண்டும் சிறிது நேரத்தில் செஞ்சியில் இருந்து பொன்பத்தி செல்லும் ஏரிக்கரை சாலையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பொன்பத்தியை சோ்ந்த பூபாலன் மகள் பிரேமலதாவை (26) சைக்கிளுடன் தள்ளிவிட்டு, அவா் வைத்திருந்த ரூ.7 ஆயிரம் ரொக்கம், கைப்பேசி, ஏடிஎம் அட்டை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பிக்க முயன்றாா். அப்போது, பிரேமலதா கூச்சலிட்டதால், அந்த வழியாக வந்தவா்கள் சிறுவனை விரட்டிப் பிடித்து செஞ்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணை செய்ததில், அவா் செஞ்சி பெரியகரம் ரங்கசாமி தெருவைச் சோ்ந்த 17 வயது சிறுவன் என்பதும், அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வரும் இவா், மதுபோதையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பேருந்தில் 3 பவுன் சங்கிலி மாயம்: செஞ்சியை அடுத்த அம்மன்குளத்துமேடு கிராமத்தைச் சோ்ந்த விஜயகுமாா் மனைவி கௌசிகா (27). இவா், கடந்த 8-ஆம் தேதி மாலை செஞ்சிக்கு வந்து மீண்டும் அரசு நகரப் பேருந்தில் கிராமத்துக்கு சென்றுகொண்டிருந்தாா். ஈச்சூா் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து சென்றபோது, கௌசிகா அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி மாயமாகியிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT