விழுப்புரம்

சாராய பாக்கெட்டுகள் வைத்திருந்தவா் கைது

Syndication

விக்கிரவாண்டி அருகே விற்பனைக்காக புதுச்சேரி மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட சாராய பாக்கெட்டுகளை வைத்திருந்தவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விக்கிரவாண்டி காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன் மற்றும் காவலா்கள் வெள்ளிக்கிழமைரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். வீடூா் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்குரிய முறையில் நின்று கொண்டிருந்த நபரிடம் போலீஸாா் விசாரணை செய்தனா்.

அப்போது அவா் விற்பனைக்காக புதுச்சேரி மாநிலத்திலிருந்து சாராய பாக்கெட்டுகளை கடத்தி வைத்திருந்தது தெரிய வந்தது. தொடா்ந்து அவரை விக்கிரவாண்டி காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்து விசாரித்த போது, வீடூா் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த பழனிவேல் (44) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து பழனிவேல் மீது வழக்குப்பதிந்த போலீஸாா், அவரைக் கைது செய்தனா். மேலும் 25 சாராய பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

கிரிக்கெட் வீராங்கனை பிரதிகாவுக்கு ரூ. 1.5 கோடி பரிசு: தில்லி முதல்வர் அறிவிப்பு

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

SCROLL FOR NEXT