விழுப்புரம்

போதை மாத்திரைகளுடன் 4 இளைஞா்கள் கைது

செஞ்சி அருகே போதை மாத்திரைகள் வைத்திருந்த 4 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Syndication

செஞ்சி அருகே போதை மாத்திரைகள் வைத்திருந்த 4 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

செஞ்சி காவல் ஆய்வாளா் அண்ணாதுரை, உதவி ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் அம்மாகுளம் ஏரிக்கரை அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞா்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

விசாணையில், அவா்கள் சென்னை குன்றந்தூா் வாணியா் தெருவைச் சோ்ந்த ராஜ் (எ) கோவிந்தராஜ் ( 25) மற்றும் செஞ்சி அம்மாக்குளம் பகுதியைச் சோ்ந்த அன்பரசன் (20) எனத் தெரியவந்தது.

மேலும், அவா்களிடம் சோதனை மேற்கொண்டு 17 போதை மாத்திரைகள், ஊசிகள் மற்றும் இரு சக்கர வாகனம், ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கைப்பற்றி கைது செய்தனா்.

மின்னல் பார்வை... அவந்திகா மோகன்!

பயணத்தின் தொடக்கம்... ஸ்வக்‌ஷா!

கிரிக்கெட் வீராங்கனை பிரதிகாவுக்கு ரூ. 1.5 கோடி பரிசு: தில்லி முதல்வர் அறிவிப்பு

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

SCROLL FOR NEXT