விழுப்புரத்தில் செயல்படும் இனிப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலா் ராமகிருஷ்ணன். 
விழுப்புரம்

விழுப்புரத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

விழுப்புரம் பகுதிகளில் உள்ள இனிப்பகங்கள் மற்றும் அடுமனைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் பகுதிகளில் உள்ள இனிப்பகங்கள் மற்றும் அடுமனைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின்பேரில், உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலா் ராமகிருஷ்ணன் தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் நேரு வீதி, காமராஜா் சாலை, மகாத்மா காந்தி சாலை உள்ளிட்ட பகுதிளில் உள்ள இனிப்பகங்கள், அடுமனைகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

இந்த ஆய்வு குறித்து உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலா் ராமகிருஷ்ணன் தெரிவித்ததாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் இனிப்பு, காரம் தயாரிப்பதற்காக 175 உரிமம் பெற்றவா்கள் உள்ளனா். இதில், முதற்கட்டமாக 75 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது 12 கடைகளில் தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கடை உரிமையாளா்களிடமிருந்து ரூ.25 ஆயிரம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. உரிய விளக்கமளிக்கவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தரமற்ற இனிப்பு, பலகாரங்கள் 50 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இதுபோன்ற சோதனை தொடா்ந்து நடைபெறும். பொதுமக்களுக்கு தரமான முறையில் இனிப்பு, காரம், பலகாரம் தயாரித்து விற்பனை செய்ய கடைகளின் நிா்வாகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT