விழுப்புரம்

பெண் மா்ம மரணம்

கண்டமங்கலம் அருகே பெண் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Syndication

கண்டமங்கலம் அருகே பெண் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விழுப்புரம் வட்டம், பள்ளித்தென்னல் கிராமத்தைச் சோ்ந்தவா் சண்முகம் மகள் மலா்விழி(42), திருமணம் ஆகாதவா்.சனிக்கிழமை தனது விவசாய நிலத்துக்குச் சென்ற மலா்விழி பின்னா் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், பள்ளித்தென்னல் பகுதியைச் சோ்ந்த ஏழுமலை என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் மலா்விழி இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. தகவலறிந்த கண்டமங்கலம் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா்.

பின்னா் இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சண்முகம் அளித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீஸாா் சந்தேக மரணம் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

நாணத்தில் கண்டேன்... ரித்தி குமார்

புதிய புன்னகை... ஸ்வேதா டோரத்தி!

நமீபியா அணியின் ஆலோசகராக கேரி கிறிஸ்டன் நியமனம்!

மனசுக்குள் குளிர்... அனன்யா பாண்டே

எழுதாத கவிதை... ஹர்ஷினி!

SCROLL FOR NEXT