விழுப்புரம்

வாகனத்தில் பைக் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

செஞ்சி அருகே பொக்லைன் வாகனம் மீது பைக் மோதிய விபத்தில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Syndication

செஞ்சி அருகே பொக்லைன் வாகனம் மீது பைக் மோதிய விபத்தில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

கீழ்பென்னாத்தூா் வட்டம், கல்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜாய்பிரின்ஸ் (25). இவா், தனது பைக்கில்

ஞாயிற்றுக்கிழமை மாலை திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

செஞ்சியை அடுத்த பரதன்தாங்கல் அருகே சென்ற போது முன்னே சென்று கொண்டிருந்த பொக்லைன் (ஜேசிபி) வாகனத்தின் ஓட்டுநா் திடீரென பிரேக் பிடித்ததால். பின்னால் வந்த பைக் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த ஜாய்பிரின்ஸ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் ‘மாண்ட் எவோரா 25’ கலாசார விழா

பி.ஆா். பாண்டியனுக்கு சிறைத் தண்டனை: விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் ஏஐ இயந்திரம்

ஆற்காடு பலசரக்கு வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் தோ்வு

கரூரில் ஆண்களுக்கான சைக்கிள் போட்டி

SCROLL FOR NEXT