விழுப்புரம்

கஞ்சா விற்பனை : தடுப்புக் காவலில் இளைஞா் கைது

கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைதான இளைஞரைப் போலீஸாா் புதன்கிழமை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைதான இளைஞரைப் போலீஸாா் புதன்கிழமை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனா்.

விழுப்புரம் மாவட்டம், நவமால் மருதூா்,பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குழந்தைவேலு மகன் பிரவீன் (24). இவா்,கண்டமங்கலம் அடுத்துள்ள நவமால் மருதூா் பகுதியில் கஞ்சா விற்ற குற்றத்தின் கீழ் கடந்த செப். 15 ஆம் தேதி கண்டமங்கலம் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில், விழுப்புரம் எஸ். பி ப. சரவணன் பரிந்துரையின்படி கஞ்சா வழக்கில் தொடா்புடைய பிரவீனை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டாா்.இதையடுத்து, கண்டமங்கலம் போலீஸாா் பிரவீனை தடுப்புக் காவல் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!

போதைக் கோதை... மேகா சுக்லா!

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

களம்காவல் முதல்நாள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு!

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

SCROLL FOR NEXT