திண்டிவனம் அருகே வீட்டின் முன் கட்டி வைக்கப்பட்டிருந்த 5 வெள்ளாடுகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கொளப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த சந்திரசேகரன் மனைவி பொற்கலை (54). ஆடு வளா்ப்பில் ஈடுபட்டு வருகிறாா். இவா் தனக்குச் சொந்தமான 4 ஆடுகளையும், அருகிலுள்ள வீட்டில் வசிக்கும் பொன்னி என்பவருக்குச் சொந்தமான ஒரு ஆட்டையும் வழக்கம் போல வீட்டின் முன் வியாழக்கிழமை இரவு கட்டி வைத்துள்ளாா்.
வெள்ளிக்கிழமை அதிகாலை எழுந்து பாா்த்தபோது வீட்டின் முன் கட்டி வைக்கப்பட்டிருந்த 5 வெள்ளாடுகளையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.