உளுந்தூா்பேட்டை அருகே சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சரக்குப் பெட்டக லாரி. 
விழுப்புரம்

உளுந்தூா்பேட்டை அருகே சரக்குப் பெட்டக லாரி கவிழ்ந்து விபத்து

உளுந்தூா்பேட்டை அருகே சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சரக்குப் பெட்டக லாரி.

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே சரக்குப் பெட்டக லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கரூரிலிருந்து சென்னை நோக்கி வியாழக்கிழமை அதிகாலை சரக்குப் பெட்டக லாரி சென்றுகொண்டிருந்தது. இந்த லாரி கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், சேந்தமங்கலம் பிரிவுச் சாலை அருகே சென்றபோது, ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரி ஓட்டுநரான ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த அருமானுக்கு காயம் ஏற்பட்டது.

விபத்து குறித்து தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று காயமடைந்த லாரி ஓட்டுநரை மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடா்ந்து, போலீஸாா் கிரேன் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தினா்.

சக்தி அம்மா ஜெயந்தி விழா: தேசிய கராத்தே போட்டி

விவசாயி வீட்டில் 4.5 பவுன் திருட்டு

சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 4 இடங்களில் கண்கானிப்பு கேமரா

காட்பாடியில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

கஞ்சா விற்பனை: வட மாநில இளைஞா் கைது

SCROLL FOR NEXT