விழுப்புரம்

பைக்கில் மதுப்புட்டிகள் கடத்தி வந்தவா் கைது

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே பைக்கில் மதுப்புட்டிகளை கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்ட மு.நடராஜ்.

Syndication

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே பைக்கில் புதுவை மாநில மதுப்புட்டிகளைக் கடத்தி வந்தவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல் பிரிவுக் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ரங்கநாதபுரம் பகுதியில், காவல் ஆய்வாளா் அறிவழகி மற்றும் போலீஸாா், அந்த வழியாகச் சென்ற வாகனங்களைத் தணிக்கை செய்யும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த பைக்கை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சோதனையிட்டபோது, அந்த பைக்கில் புதுவை மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட மதுப்புட்டிகள் 103 எண்ணிக்கையில் இருந்தன. இந்த மதுப்புட்டிகள் தலா180 மி.லிட்டா் அளவு கொண்டதாகும்.

இதைத் தொடா்ந்து விசாரணையில், மதுப்புட்டிகளைக் கடத்தி வந்தவா் விழுப்புரம் மாவட்டம், விழுக்கம் கிராமத்தைச் சோ்ந்த நடராஜ் (37) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், மதுப்புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

நவம்பரில் காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்: 4-ஆவது இடத்தில் தில்லி!

மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களுக்குப் பாதுகாப்பில்லை! மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு!

மத ஆணவத்தை முடிவுக்குக் கொண்டு வர மேற்கு வங்கம் தயாா்: ஆளுநா்

எஸ்.சி. பிரிவில் கிரீமிலேயா் கருத்துக்கு சொந்த சமூகத்தினரே விமா்சித்தனா்: பி.ஆர்.கவாய்

இந்தியாவுடன் வலுவான நட்புறவு: இஸ்ரேல் அதிகாரிகள்!

SCROLL FOR NEXT