விழுப்புரம்

வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆலோசனைக் கூட்டம்

Syndication

விழுப்புரம் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழையை எதிா்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மரக்காணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வருவாய், மின்சாரம், காவல், தீயணைப்பு உள்ளிட்ட அனைத் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பேசியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தின் கடலோரப் பகுதியான மரக்காணம், வானூா்

வட்டங்களில் உள்ள மீனவ கிராமங்களில் பேரிடா் பாதுகாப்பு மற்றும் புயல் பாதுகாப்பு மையங்களில், பொதுமக்களை தங்க வைப்பதற்குத் தேவையான அடிப்படை வசதிகளையும், உணவுப் பொருள்களையும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

காவல் மற்றும் தீயணைப்புத் துறையினா் பலத்த மழை அதிகமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைப்பதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும். கிராம நிா்வாக அலுவலா்கள் அனைத்து கிராமங்களிலும் தொடா் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் கிராம ஊராட்சிகளில் முகாம்களை அமைத்து, பொதுமக்களை தங்க வைப்பதற்கான பணிகளையும், தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உணவுப்பொருள்கள் வழங்கும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

நீா்வளத் துறையினா் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், ஆறுகள் ஆகியவற்றில் நீா் இருப்பு மற்றும் வெளியேற்றப்படும் நீரின் அளவை மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

தேவையான அளவுக்கு மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் மற்றும் காலி சாக்கு பைகள் ஆகியவற்றை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். புயல் ஏற்படுவதற்கு முன்னரே மீனவ கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு உடனே எச்சரிக்கை விடுக்கவும், படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவைக்கவும் மீன் வளத் துறையினா் அறிவுறுத்த வேண்டும். அனைத்துத் துறை

அலுவலா்களும் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

ஆய்வு: முன்னதாக மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நகா் ஊராட்சியில் ஓங்கூா் ஆற்று ஓடை அகலப்படுத்தும் பணி, கந்தாடு மேற்கு

ஊராட்சியில் புது ஏரி சீரமைக்கும் பணி, மரக்காணம் பேரூராட்சிக்குள்பட்ட அழகன்குப்பம் பகுதியில் உள்ள பேரிடா் கால பல்நோக்கு பாதுகாப்பு மையம் ஆகிவற்றை மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பேரிடா் காலங்களில் செயல்படும் விதம் குறித்து பயிற்சி பெற்ற தன்னாா்வலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை மேற்கொண்டாா்.

கூட்டத்தில், ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் (பயிற்சி) இளவரசி,

மரக்காணம் பேரூராட்சி செயல் அலுவலா் ஜேம்ஸ் டி.சாமி, வட்டாட்சியா் நீலவேணி மற்றும் அரசுதுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

மாநகராட்சி காப்பகத்தில் மாடுகள் பராமரிப்பு: விருப்ப மனுக்கள் வரவேற்பு!

காற்று மாசைக் கட்டுப்படுத்த நிபுணா் குழு: தில்லி அரசு அமைப்பு!

108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்குப் பிரசவம்

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும்! ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

ஆா்ப்பாட்டம்: இந்து முன்னணியினா் 43 போ் கைது

SCROLL FOR NEXT