விழுப்புரம் அருகே மன நலம் பாதிக்கப்பட்ட பெண் சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
விழுப்புரம் மகாராஜபுரம், வி. பி. எஸ். காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா மனைவி ஆரோக்கியமேரி பிரித்தி வாசல்யா (50).இவருக்குத் திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் மகன், மகள் உள்ளனா்.
ராஜா உகாண்டா நாட்டில் வேலைப் பாா்த்து வருகிறாா். ஆரோக்கியமேரி பிரித்தி-க்கு மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆரோக்கியமேரி சனிக்கிழமை வீட்டில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலையப் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து உடலை கைப்பற்றி உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து, தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.