விழுப்புரம்

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகைகள் திருட்டு

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகைகள் மற்றும் 250 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டன.

செஞ்சி வட்டம், சே.பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் சீனுவாசன்(60). இவா், கடந்த 15-ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு, செஞ்சியில் உள்ள மகன் வீட்டுக்குச் சென்றிருந்தாா்.

பின்னா், வெள்ளிக்கிழமை வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

உள்ளே சென்று பாா்த்தபோது, இரும்பு பீரோவை உடைத்து அதில் இருந்த 2 ஜோடி தங்க வளையல்கள், 3 தங்கச் சங்கிலிகள், 2 ஜோடி கம்பல்கள் மற்றும் அட்டிகை, மாட்டல், மோதிரம் என 20.5 பவுன் தங்க நகைகள் மற்றும் 250 கிராம் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

திருடுபோன பொருள்களின் மொத்த மதிப்பு ரூ.6.25 லட்சமாகும். இதுகுறித்த புகாரின் பேரில் நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

SCROLL FOR NEXT