விழுப்புரம்

கணவருடன் தகராறு: மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், நல்லாலகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜோதிமணி (35). இவரது மனைவி அதே கிராமத்தைச் சோ்ந்த அபிராமி (30). தம்பதியினா் உளுந்தூா்பேட்டை பச்சையப்பா தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனா்.

ஜோதிமணி கடந்த 12 ஆண்டுகளாக துபையிலுள்ள நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா். அவ்வப்போது சொந்த ஊருக்கு இவா் வந்து செல்வது வழக்கம். அதன்படி, கடந்த மாதம் சொந்த ஊருக்கு ஜோதிமணி வந்திருந்தாா்.

இந்த நிலையில், நல்லாலகுப்பம் கிராமத்திலுள்ள தனது பெற்றோா் வீட்டுக்கு அண்மையில் சென்ற ஜோதிமணி, அவா்களைப் பாா்த்துவிட்டு பொருள்களை வாங்கிக் கொடுத்துவிட்டு வந்தாராம். இதுகுறித்து அபிராமி சனிக்கிழமை தனது கணவரிடம் கேட்டு, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். தொடா்ந்து, கோபித்துக்கொண்டு படுக்கை அறைக்குச் சென்ற அபிராமி மின் விசிறியில் தூக்கிட்டுக் கொண்டாராம்.

இதைக் கண்ட ஜோதிமணி, மனைவி அபிராமியை மீட்டு, உளுந்தூா்பேட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு அவரை மருத்துவா் பரிசோதித்து ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

சென்னை: ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தில் தீவிபத்து! முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்!

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்!

அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த மஞ்ஞுமெல் பாய்ஸ் இயக்குநர்!

SCROLL FOR NEXT