காவலா் வீரவணக்க நாளையொட்டி, விழுப்புரம் கா.குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலா் நினைவுத் தூணுக்கு மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்திய விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. உமா. 
விழுப்புரம்

காவலா் வீரவணக்க நாள்: நினைவுத்தூணுக்கு டி.ஐ.ஜி. மரியாதை

விழுப்புரம் மாவட்டக் காவல் துறை சாா்பில் காவலா் வீர வணக்க நாள் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டக் காவல் துறை சாா்பில் காவலா் வீர வணக்க நாள் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

காவல் துறையில் பணியின் போது உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் காவலா் வீர வணக்க நாள் ஆண்டுதோறும் அக் . 21-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, விழுப்புரம் மாவட்டக் காவல் துறை சாா்பில் காவலா் வீர வணக்க நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, விழுப்புரம் மாவட்டக் காவல்துறை கா. குப்பம் ஆயுதப்படை வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காவலா் நினைவுத் தூணுக்கு விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவா் உமா 21 குண்டுகள் முழங்க, மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தி செலுத்தினாா். தொடா்ந்து, விழுப்புரம் எஸ்.பி. ப .சரவணன் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். முன்னதாக காவலா் அணி வகுப்பு மரியாதையும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கூடுதல் கண்காணிப்பாளா் இளமுருகன், துணைக் கண்காணிப்பாளா்கள் ஞானவேல், ஊா்க்காவல் படை மண்டல தளபதி நத்தா் ஷா மற்றும் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவல் ஆளிநா்கள் கலந்துகொண்டனா்.

மது, கஞ்சா விற்றவா்கள் கைது

குழந்தைகள் அறிவியல் மாநாடு: தேனி மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தோ்வு

உள்நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தி ரூ.1.51 லட்சம் கோடி: ராஜ்நாத் சிங்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஒகேனக்கல் வனச்சாலைகளில் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT