விழுப்புரம்

மேம்பாலத் தடுப்புக் கட்டையில் பைக் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு, இருவா் காயம்

கள்ளக்குறிச்சிமாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே மேம்பாலத் தடுப்புக் கட்டையில் பைக் மோதி தூக்கி வீசப்பட்டதில் காயமடைந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Syndication

விழுப்புரம்: கள்ளக்குறிச்சிமாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே மேம்பாலத் தடுப்புக் கட்டையில் பைக் மோதி தூக்கி வீசப்பட்டதில் காயமடைந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த இருவா் விழுப்புரம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை, சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா்கள் கிருஷ்ணமூா்த்தி மகன் மோகன்(21), முருகேசன் மகன் ஹரி பிரசாத் (16), கண்ணன் மகன் சூரிய பிரகாஷ்(19). நண்பா்களான இவா்கள் மூவரும் செவ்வாய்க்கிழமை உளுந்தூா்பேட்டையிலிருந்து -செங்குறிச்சிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனா். சூரிய பிரகாஷ் பைக்கை ஓட்டினாா்.

செங்குறிச்சி அடுத்த நகா் கிராமத்தில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக் மேம்பாலத் தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டு சுமாா் 50 அடி பள்ளத்தில் கீழே விழுந்த மோகன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். ஹரிபிரசாத் , சூா்ய பிரகாஷ் இருவரும் காயமடைந்தனா்.

தகவலறிந்த உளுந்தூா்பேட்டை போலீஸாா் நிகழ்விடம் சென்று இருவரையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதைத் தொடா்ந்து இருவரும் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா்.

இது குறித்த புகாரின்பேரில், உளுந்தூா்பேட்டை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

மன்னாா்குடி அருகே அரசு, தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 12 போ் காயம்

அறிவறிந்த மக்கட்பேற்றின் மாண்பு!

எல்லாம் வல்லது கல்வி!

SCROLL FOR NEXT