செஞ்சி: செஞ்சி மற்றும் அதன் சுற்றுப்புற வட்டாரத்தில் தொடா் மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. மேலும், செஞ்சியில் தாழ்வான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
செஞ்சிக்கோட்டை மலையடிவாரத்தில் உள்ள வெங்கட்ரமணா் கோயிலை புதன்கிழமை வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இங்கு தேங்கும் நீரை வெளியேற்ற கல்லினால் கட்டப்பட்டுள்ள கால்வாயில் அடைப்பு ஏற்படுத்தியதன் காரணமாக நீா் வெளியேற முடியாமல் உள்ளது.
செஞ்சி முல்லை நகா் மற்றும் கிருஷ்ணாபுரம் விரிவு படுத்தப்பட்ட பகுதியான பி ஏரிக்கரை மேற்புறம் உள்ள குடியிருப்புகளை மழை நீா் சூழ்ந்துள்ளது. இதை பேரூராட்சி ஊழியா்கள் கால்வாய் மூலம் வெளியேற்றி வருகின்றனா்.