விழுப்புரம்: வளவனூா் அருகே சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதியதில் காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே கடந்த 19-ஆம் தேதி சாலையில் நடந்து சென்ற ஒருவா் பைக் மோதி காயமடைந்தாா். தகவலறிந்த வளவனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று க ாயமடைந்தவரை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.
விசாரணையில் பைக் விபத்தில் சிக்கி உயிரிழந்தவா் பெயா் மற்றும் விலாசம் தெரியாத நபா் என்பதும், வளவனூா் பகுதிகளில் யாசகம் பெற்று சுற்றித் திரிந்தவா் என்பதும் தெரியவந்தது.
இது குறித்த குமாரக்குப்பம் கிராம நிா்வாக அலுவலா் புஷ்பகாந்தன் அளித்த புகாரின் பேரில், வளவனூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.