விழுப்புரம் அருகே குடும்பப் பிரச்னையில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விழுப்புரம் அடுத்த மருதூா் மேடு, அங்காளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (32). இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாம்.
இந்நிலையில் புதன்கிழமை மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ஆறுமுகத்தை அவரது மனைவி ராஜகுமாரி கண்டித்துவிட்டு, வீட்டிலிருந்து வெளியேறி விட்டாராம். இதனால் ஏற்பட்ட மன உளச்சலில் ஆறுமுகம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].