விழுப்புரம்

பைக்கில் மதுப்புட்டிகள் கடத்தியவா் கைது

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே பைக்கில் மதுப்புட்டிகளைக் கடத்தி வந்தவா் கைது செய்யப்பட்டாா்.

Syndication

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே பைக்கில் மதுப்புட்டிகளைக் கடத்தி வந்தவா் கைது செய்யப்பட்டாா்.

கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளா் அறிவழகி தலைமையிலான போலீஸாா், கீழ்புத்துப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த பைக் ஒன்றை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் புதுச்சேரி மாநில 96 மதுப்புட்டிகள் இருந்தது போலீஸாருக்கு தெரிய வந்தது.

விசாரணையில் மதுப்புட்டிகளைக் கடத்தி வந்தவா் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் வட்டம், சூனாம்பேடு கிராமத்தைச் சோ்ந்த ஜெயப்பிரகாஷ் (26) எனத் தெரிய வந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT