வாழைப்பூவில் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி உள்ளிட்டவை அதிகமுள்ளது. ஊட்டச்சத்து நிறைந்த ஓர் உணவுப்பொருளாக இது பார்க்கப்படுகிறது.
வாழைப்பூவை இரண்டு வாரங்கள் சமைத்துச் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கொழுப்பு குறைந்து ரத்த ஓட்டம் சீராகும். இதனால் ரத்தசோகை வராது.
பெண்களின் கர்ப்பப்பைக் கோளாறு, வெள்ளைப்படுதல், மாதவிடாய்க் கோளாறு போன்றவற்றுக்கு இது மிகச்சிறந்த மருந்து.
வேக வைத்த வாழைப்பூ, நீரிழிவு நோய்களுக்கு மிகச்சிறந்த உணவாகும். இதில் உள்ள ஹைப்போகிளைசீமிக் எனும் வேதிப்பொருள், நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
இதில் ஆன்டி- ஆக்சிடன்ட் அதிகமாக இருப்பதால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. கண்பார்வையை மேம்படுத்தவும் உதவும்.
இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது, மேலும் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
வாழைப்பூவை சூப், சாலட், பொரியல்,வடை, சட்னியாக சமைத்து சாப்பிடலாம். சிறிது மசாலா சேர்த்து கூட்டாகவும் உணவில் சேர்க்கலாம். சிறிது எலுமிச்சைச் சாற்றைச் சேர்ப்பது அதன் கசப்புத்தன்மையைக் குறைக்க உதவும்.