294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப். 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
முன்னெப்போதும் இல்லாத அளவில் முதல்கட்டத் தேர்தலில் 93.19 சதவிகித வாக்குகள் பதிவாகின.
தொடர்ந்து இன்று(ஏப். 29) 142 தொகுதிகளுக்கு இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
காலை 7 மணி முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். முதியவர்களும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதிக்கு இன்றுதான் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பவானிபூர் தொகுதியில் மமதாவுக்கு எதிராக போட்டியிடும் சுவேந்து அதிகாரி, நந்திகிராம் தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
தான் போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் மமதா பானர்ஜி ஆய்வு செய்தார். அதேபோல சுவேந்து அதிகாரியும் ஆய்வு செய்தார்.
கொட்டும் மழையிலும் வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் மக்கள்...
மேற்குவங்கத்தில் சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக சலசலப்பு, வன்முறை ஏற்பட்டுள்ளது.
ஹவுராவில் மழைக்கு இடையே வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் மக்கள்..
கொல்கத்தாவில் வாக்களிக்க காத்திருக்கும் கன்னியாஸ்திரிகள்...