நேபாளம் பேரிடரில் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 1,000-ஐ நெருங்கியுள்ளது.
நூற்றுக்கணக்கான உடல்களுக்கு யாரும் உரிமை கோரப்படாததால் பிணவறைகள் சடலங்களால் நிரம்பி வழிகின்றன. நோய்த் தொற்று அபாயம் எழுந்துள்ளது.
இதனால் உரிமை கோரப்படாத உடல்களை நேபாளத்தில் உள்ள சித்வான் நகரில் துணை ராணுவப் படையினர் புதைத்து வருகின்றனர்.
பின்னர் சடலங்களை யாரேனும் உரிமை கோரினால் உறுதி செய்ய ஏதுவாக புதைப்பதற்கு முன்னதாக மரபணு மாதிரிகளை மருத்துவர்கள் சேகரிக்கின்றனர்.
நேபாளத்தில் தோண்டும் இடங்களில் எல்லாம் சடலங்கள் கண்டெடுக்கப்படுவதால் செய்வதறியாது திணறும் அரசு.
சேறு, சகதிகளில் பிணங்களைத் தேடும் மீட்புப் படைகள்.