தவெக தோழமை கட்சிக் கூட்டத்தில் பேசியது என்ன?

தவெக தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் கோவளத்தில் இன்று நடைபெற்றது.

தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தந்த தோழமை கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இக்கூட்டம் நடைபெற்றது.

தோழமை கட்சிகளுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றன

கம்யூனிஸ்ட் கட்சிகள் (சிபிஎம், சிபிஐ) தோழமை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. வெளியில் இருந்து ஆதரவு தருவதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என விளக்கம் அளித்தனர்.

கூட்டத்திற்கு பிறகு வைகோ, திருமாவளவன், மாணிக்கம் தாகூர், காதர் மொகிதீன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...