எளிமையான வீட்டு சமையல் குறிப்புகள்:வெயிலுக்கான நீர் மோரில் பச்சை மிளகாய்க்குப் பதில் சிறிதளவு சுக்கு சேர்த்தால், சுவை கூடும்.
குக்கரில் பருப்பு வைக்கும்போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தைச் சேர்க்கவும். வழக்கம்போல சாம்பார், ரசம் என்று எது வேண்டுமானாலும் செய்யலாம். வெந்தயம் வாயுவை முறியடிக்கும்.
ரசப் பொடி என்று தனியாகத் தயாரிக்காமல் மிளகு, சீரகத்தை வாணலியில் வறுத்துப் பொடி செய்தால், தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
அரிசி மாவு, கோதுமை மாவு வைத்துள்ள பாட்டில்களில் பட்டை, இலை ஒன்றைப் போட்டு வைத்தால், மாவுகளில் ஈரம் பூக்காமல் இருக்கும்.
ஜாதிக்காயை தண்ணீர்விட்டு அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.
சுக்கைத் தட்டி அதை கஷாயமாகப் போட்டு, தேனும் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.
சமையல் செய்யும்போது கையில் சூடுபட்டால், பீட்ரூட்டைப் பிழிந்து, அதன் சாறை எடுத்துத் தடவுங்கள்.
நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் தலைபாரம் நின்றுவிடும்.