தலைமுடி ஏன் நரைக்கிறது?

வயதாவது என்பது உடலின் செல்கள், உறுப்புகளின் செயல்திறன் காலப்போக்கில் குறைவதைக் குறிக்கிறது. இது ஓர் இயற்கையான உயிரியல் செயல்முறை ஆகும்.

காலப்போக்கில் மூலக்கூறு, மரபணு, செல் சேதங்கள் குவிவதால் ஏற்படும் ஓர் இயற்கையான வாழ்க்கைச் செயல்முறை.

வயதாகும்போது உடலில் செல்கள் பிரிவதையும், செல்கள் உகந்த முறையில் செயல்படுவதையும் நிறுத்திவிடுகின்றன.

இதனாலே உடலில் சோர்வு ஏற்படுகிறது, முகத்தில், உடலில் தோன்றும் சுருக்கங்கள், நரைமுடிகள், பார்வை மெல்ல மங்குவதற்கு இதுதான் காரணம்.

முடிக்கு நிறம் அளிக்கும் மெலனின் என்ற நிறமிப் பொருளின் உற்பத்தி, வயது ஆக ஆகக் குறைந்து, இறுதியில் முற்றிலும் நின்றுவிடுகிறது.

இதன் விளைவாக முடி தனது இயல்பான நிறத்தை இழந்து நரைக்கத் தொடங்குகிறது.

மனித உடலில் முதுமையின் முதல் அடையாளங்கள் இருபது வயதிலேயே தோன்ற ஆரம்பிக்கலாம்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு ஆகியவை செல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட பெரிதும் உதவுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...