போட்டியால் உருவாகும் புது உலகம்!

நடுப்பக்கம்

எரிசக்தி மாற்றம் மட்டுமே காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் ஆயுதம் என உலக நாடுகள் கருத இயலாது. அரிய கனிமங்கள், நிலக்கரி, எண்ணெய் போன்ற மூலப் பொருள்களின் விநியோகச் சங்கிலிகள், பதப்படுத்தும் திறன், தொழில்நுட்பம் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடுகளும் காலநிலை மாற்றத்தை தீர்மானிக்கும்.

காலநிலை மாற்றத்தின் காரணமாக ஆர்க்டிக் பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இதன் விளைவாக இப்போது பூமியின் "கிரீடம்' என்று அழைக்கப்படும் ஆர்க்டிக் வழியாகப் பயணிப்பதன் மூலம், கப்பல்களால் கண்டங்களை விரைவாகக் கடக்க முடிகிறது.

செம்பு இருப்பு அதிகம் உள்ள நாடுகளான பெரு, சிலி, காங்கோ ஆகியவற்றின் மீது உலகின் கவனம் திரும்பி உள்ளது. தேவை அதிகரித்து வருவதால், அடர்ந்த காடுகள், பல்லுயிர் வளம் நிறைந்த பகுதிகளில் மேலும் பல சுரங்கங்கள் திறக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதில் சிறந்து விளங்கும் சீனா, பசுமைத் தொழில்நுட்ப செயலாக்கத்திலும் முன்னணியில் உள்ளது. சீனாவின் வழியைப் பின்பற்றி மற்ற நாடுகள் புதிய சுரங்கங்களையும் ஒப்பந்தங்களையும் கண்டறியும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...