செம்பருத்தி தேநீர் பற்றி தெரியுமா?

இரண்டு செம்பருத்திப் பூவின் (5 இதழ் கொண்டது) இதழ்களை மட்டும் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டி தேன் கலந்தால் செம்பருத்தி தேநீர் ரெடி.

இதனால் உடல்சூடு தணியும், வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப் போக்கு, சர்க்கரை நோய், வெள்ளைப்படுதல் உள்ளிட்ட நோய்கள் குணமாகும்.

ரத்தத்தில் பித்தம் குறையும். தலைமுடி உதிர்தல் நிற்கும். சர்க்கரை நோயாளிகள் தேனைத் தவிர்க்கலாம்.

இதில் வைட்டமின் சி மற்றும் இதர சத்துகள் இருப்பதால் நோயெதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும்.

தினமும் செம்பருத்தி தேநீர் குடித்துவர உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவும்.

அதேபோல சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமம் பொலிவடையச் செய்யும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...