சைனஸ் என்பது சுவாசப் பாதையில் ஏற்படும் தொற்று அல்லது வீக்கம் எனப்படுகிறது.
இதனால் தலைவலி, மூக்கடைப்பு, சளி, காய்ச்சல் ஆகிய தொந்தரவுகள் ஏற்படும். முகத்தில் அழுத்தம் இருப்பது போலத் தோன்றும்.
நெற்றி, கண்கள் மற்றும் கன்னங்களைச் சுற்றி கடுமையான வலி அல்லது அழுத்தம் ஏற்படும்.
வீட்டு வைத்திய முறையில் இதற்கு தீர்வு காணலாம். சிறிய வெங்காயத்தின் காய்ந்த தோடுகளை சுத்தமாகச் சேகரித்து தலையணையாக்கி உறங்கினால் சைனஸ் பிரச்னை தீர்ந்துவிடும்.
அதேபோல ஒரு தேக்கரண்டி தேன் எடுத்து, லேசாகச் சூடாக்கி, அதில் மிளகுத்தூள் கலந்து, சிறிதளவு துளசி இலைகளை இடித்து அதில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும்.
இதனால் காய்ச்சல், இருமல், மூச்சு வாங்குதல் ஆகிய சைனஸ் பிரச்னை படிப்படியாக குணமாகும்.
இதுதவிர ஆவி பிடிப்பது, வலி உள்ள இடங்களில் சூடான நீரைக் கொண்டு ஒத்தடம் கொடுப்பது இதமாக இருக்கும்.