ஆளி விதைகள் உடலுக்கு ஆற்றலைத் தருவது மட்டுமின்றி உடல் எடையைக் குறைக்கவும் உதவுகின்றன.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, லிக்னான்கள் என ஊட்டச்சத்து நிறைந்த சூப்பர் உணவுதான் ஆளி விதைகள். மாங்கனீஸ், மெக்னீசியம், காப்பர், பாஸ்பரஸ், தையமின் ஆகிய தாதுக்களும் உள்ளன.
இது முக்கியமாக உடலில் செரிமானத்திற்கு அதிகம் உதவுகிறது. உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது.
மேலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்கும் தன்மை கொண்டது. இதனால் உடலில் எல்டிஎல் எனும் கெட்ட கொழுப்பின் அளவு குறைகிறது. இதனால் உடை எடை குறைய வாய்ப்புள்ளது. ஆளி விதைகளில் உள்ள நல்ல கொழுப்பு, உடலுக்குத் தேவையானதும்கூட.
உடலில் கொழுப்புகளைக் குறைப்பதால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறது. ரத்த சர்க்கரையின் அளவையும் சமநிலைப்படுத்துகிறது.
இதன் எதிரொலியாக இதய ஆரோக்கியம் மேம்படும், அதுமட்டுமின்றி டைப் 2 நீரிழிவு, புற்றுநோயைக் குறைக்கும் தன்மை கொண்டது.
ஹார்மோன்களைச் சமநிலைப்படுத்தவும் உதவும். குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும் மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது.
ரத்த அழுத்தம், அழற்சியைக் குறைக்கும், ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் இதில் அதிகமிருப்பதால் அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது.