அப்பா... மகனே...

பாமகவில், நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு இடையே இதுநாள் வரை இருந்து வந்த தந்தை - மகன் மோதல் இன்று முடிவுக்கு வந்துள்ளது.

இதுநாள் வரை, ராமதாஸ் கட்சி, அன்புமணி கட்சி என இரண்டாகப் பிரிந்திருந்த பாமக, இன்றைய சந்திப்பின்மூலம் ஒன்றிணையும் என அக்கட்சியின் தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தைலாபுரம் பகுதியில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்துக்கு இன்று பாமக தலைவர் அன்புமணி குடும்பத்துடன் வந்தார். அவரை ராமதாஸ் ஆரத்தழுவி கண்ணீருடன் வரவேற்றுள்ளார்.

ராமதாஸ் - சரஸ்வதி தம்பதியின் 61-வது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு, அன்புமணி தன்னுடைய குடும்பத்துடன் வந்து பெற்றோரிடம் ஆசிர்வாதம் பெற்றார்.

அன்புமணியின் கையில் இருந்த கொள்ளுப் பேத்தியை ராமதாஸ் கொஞ்சி மகிழ்ந்தார்.

இதுவரை இரண்டாகப் பிரிந்திருந்த பாமக, ஒன்றிணைவதால், அக்கட்சித் தொண்டர்கள் சொல்லொணா மகிழ்ச்சியில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...