தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, கோவை உள்பட 6 கோட்டங்களுக்காக 300 புதிய அரசுப் பேருந்துகளின் சேவைகளை முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (வியாழக்கிழமை) தொடக்கிவைத்தார்.
அந்த பேருந்தில் முன் இருக்கையில் அமர்ந்து பயணம் மேற்கொண்ட முதல்வர் விஜய், நடத்துனரிடம் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்துக் கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பெரம்பூருக்குச் செல்லும் பேருந்தில் டிக்கெட் எடுத்து முதல்வர் ஜோசப் விஜய் பயணம் மேற்கொண்டார்.
ஓட்டுநர் அருகே முன்புற இருக்கைக்குச் சென்ற முதல்வர் விஜய், தனது செல்போனில் சாலையில் நிற்கும் மக்களையும் பேருந்து பயணத்தை அவரே விடியோவாக பதிவிட்டு பயணம் மேற்கொண்டார்.