பற்களின் ஈறுகளில் ரத்தம் கசிவது ஏன்?

சிலருக்கு பற்களின் ஈறுகளில் அடிக்கடி ரத்தம் கசிவது ஏற்படலாம். இது இயல்பானது என்று விட்டுவிடக் கூடாது.

ஈறுகளில் ரத்தம் கசிவது ஈறு நோய் இருப்பதையோ அல்லது அதற்கான அபாயத்தையோ குறிக்கலாம்.

அவை பெரும்பாலும் பற்களில் உணவுத் துகள்கள் மற்றும் சர்க்கரை படிவதால் ஏற்படும் வீக்கத்தின் அறிகுறியாகும்.

தொடர்ந்து ரத்தம் கசிந்தால், அது ஈறு நோயாக மாறுவதற்கும் இறுதியில் பல் இழப்பிற்கும் வழிவகுக்கும்.

எனவே, அபாயத்தைக் குறைக்க, ஒரு பல் மருத்துவ நிபுணரை உடனடியாக அணுகுவது நல்லது.

பல் துலக்குதல், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் என வாய்வழி ஆரோக்கியத்தை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

அதிக விசையுடன் கடினமாக அழுத்தி பல் துலக்கும்போது, பற்கள் தேய்மானம், ஈறு மேலே செல்லுதல், பல் கூச்சம் அதிகரித்தல் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழுமையான செய்திக்கு....