சருமப் பராமரிப்பு: இந்த 5 பொருள்கள் வேண்டாம்!

சருமத்தைப் பாதுகாக்க, சருமப் பராமரிப்புக்கு சில பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என்று தோல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

சருமத்தை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஸ்க்ரப்பர்களான லூஃபாக்களில் பாக்டீரியா, பூஞ்சை தொற்று இருக்கும். அவற்றைப் பயன்படுத்தும்போது பல்வேறு சருமப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கின்றனர்.

பிளாஸ்டிக் சீப்புகள் தலைமுடியில் வெப்பத்தைக் கடத்துவதால் முடி உதிர்தல், முடி உடைதல், எரிச்சல் ஏற்படலாம். சீப்பில் உள்ள அழுக்கு மூலமாகவும் தலையில் பொடுகு ஏற்படலாம். அதனால் பிளாஸ்டிக் சீப்புகளுக்குப் பதிலாக மரத்தாலான சீப்புகளைப் பயன்படுத்தலாம்.

மூக்கின் மீது இருக்கும் கரும்புள்ளிகளை அகற்ற உதவும் நோஸ் ட்ரிப்ஸ் எனும் மூக்குப் பட்டைகள் மூலமாகவும் சரும எரிச்சல் ஏற்படலாம்.

சருமத்தைச் சுத்தம் செய்ய மேக்கப் வைப்ஸ் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இது சருமத்தின் பிஎச்(PH) தன்மையை சீர்குலைக்கின்றன. இதில் இருக்கும் ரசாயனப் பொருள்கள் சருமத்திற்குப் பிரச்னையை உண்டுபண்ணுகின்றன.

ரசாயனம் அதிகம் சேர்க்கப்பட்ட ஷாம்பூ பயன்படுத்தும்போது அதில் உள்ள கெமிக்கல் தலையின் வேர்க்கால்களில் படிந்து அரிப்பை ஏற்படுத்தலாம். அதனால் ரசாயனம் குறைந்த முடி உதிர்தலைத் தடுக்கும் ஷாம்பூக்களைப் பயன்படுத்த வேண்டும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...