நோ சுகர் டயட்... என்ன செய்ய வேண்டும்?

உடல் எடையைக் குறைக்க உணவில் கண்டிப்பாக சர்க்கரையைத் தவிர்க்க வேண்டியது அவசியமாகிறது.

பாட்டில்களில் அடைக்கப்பட்ட செயற்கையான சர்க்கரை நிறைந்த பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

அதேபோல பழச்சாறுகளையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். பழங்களைச் சாறாக எடுத்துக்கொள்ளும்போது உடலில் சர்க்கரை மூலக்கூறுகள் சேரும். மாறாக, முழுதாக பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது.

டீ/ காபி குடிப்பதைத் தவிர்க்கலாம் அல்லது சர்க்கரை, பால் சேர்க்காமல் பிளாக் டீ, கிரீன் டீ அருந்தலாம்.

நொறுக்குத் தீனிகள் அறவே கூடாது, முழு கோதுமை உணவுப் பொருள்கள், நட்ஸ் மூலமாக செய்யப்பட்ட நொறுக்குத் தீனிகளில் சர்க்கரை இருக்கும்.

சாக்லேட், பிஸ்கட் போன்ற பொருள்களை எடுத்துக்கொள்ள வேண்டாம். பசிக்கும்போது நல்ல சத்தான உணவுகளைச் சாப்பிடுங்கள்.

சர்க்கரை உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் உங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் கொடுத்தாலும் வேண்டாம் என்று கூற கற்றுக்கொள்ளுங்கள். அந்த கட்டுப்பாடுடன் இருந்தால் உணவில் சர்க்கரையைக் குறைக்கலாம், ஆரோக்கியமாக இருக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...